காங்கிரஸ் செயல் தலைவர் மாரடைப்பால் காலமானார்!! ராகுல்காந்தி இரங்கல்!

 
துருவநாராயணா

கர்நாடக மாநிலத்தின்  காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் ஆர். துருவ நாராயணா. இவர், முன்னாள் எம்பியும் கூட . இவர் இன்று காலை நெஞ்சுவலி எனக் கூறியதால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  அவருக்கு வயது 61.   நெஞ்சு வலி ஏற்பட்டதும் உடனடியாக  அவரது கார் டிரைவர் அவரை மைசூருவில் உள்ள டிஆர்எம்எஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.


ஆனால் உயிரிழந்தது துரதிஷ்டவசமானது என காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உயிரிழப்பிற்கு தொண்டர்கள் பலரும் சமூக  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி  "முன்னாள் எம்.பி., திரு.ஆர்.துருவநாராயணனின் திடீர் மறைவு வருத்தமளிக்கிறது. கடின உழைப்பாளி மற்றும் தாழ்மையான அடிமட்டத் தலைவர், அவர் இந்திய தேசிய மாணவர் சங்கம் மற்றும் இளைஞர் காங்கிரஸின் தரவரிசையில் உயர்ந்த சமூக நீதிக்கான ஒரு சாம்பியனாக இருந்தார்.

rip

அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய இழப்பு . அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்." என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார்.
இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசியத் தலைவர் ஸ்ரீனிவாஸ் "சொல்ல முடியாத அதிர்ச்சியும் வருத்தமும். முன்னாள் எம்பியும், கேபிசிசி செயல் தலைவருமான ஆர்.துருவநாராயணா ஜி போன்ற தலைவரை இழந்து என் இதயம் உடைகிறது. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும். எனது ஆதரவும் பிரார்த்தனையும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் உண்டு"   என பதிவிட்டுள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web