கொண்டாட்டம் ஆரம்பம்.... பொங்கலுக்கு 10 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு... !

 
ரயில்

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பலரும் சொந்த ஊர் செல்ல தயாராகிவிட்டனர்.  சென்னை கோவை போன்ற பெருநகரங்களில் கல்வி மற்றும் பணிக்காக வசித்து வரும் லட்சக்கணக்கான மக்கள் பயணத்திற்கு திட்டம் வகுத்துள்ளனர்.  ஏற்கனவே அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிவடைந்து விட்ட நிலையில்  ரயில்களில்  கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து பொங்கல் பண்டிகைக் காலத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என சேலம் கோட்ட ரயில்வே தெரிவித்துள்ளது.  

ரயில் ரயில்வே
 
10 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு இருப்பதாக  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 ரயில் எண்.12084 கோயம்புத்தூர் - மயிலாடுதுறை ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் 14.01.2024 முதல் 17.01.2024  வரை ஒரு சேர்கார் (உட்கார்ந்து செல்லும் வசதி) ரயில் பெட்டி  அதிகரிக்கப்படும்.
ரயில் எண்.12083 மயிலாடுதுறை - கோயம்புத்தூர் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் 14.01.2024 & 17.01.2024 வரை  ஒரு சேர்கார் (உட்கார்ந்து செல்லும் வசதி) ரயில் பெட்டி  அதிகரிக்கப்படும்.

ரயில் எண்.22650 ஈரோடு - சென்னை சென்ட்ரல் ஏற்காடு எக்ஸ்பிரஸ் 16.01.2024 & 18.01.2024 ஒரு முன்பதிவு பெட்டி அதிகரிக்கப்படும்.
ரயில் எண்.22649 சென்னை சென்ட்ரல் - ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் 17.01.2024 & 19.01.2024 ஒரு முன்பதிவு பெட்டி அதிகரிக்கப்படும்.
ரயில் எண்.16616 கோயம்புத்தூர் - மன்னார்குடி செம்மொழி எக்ஸ்பிரஸ் ஜனவரி 13, 15 மற்றும் 17ம் தேதிகளில்  ஒரு முன்பதிவு பெட்டி அதிகரிக்கப்படும்.

ரயில்
 ரயில் எண்.16615 மன்னார்குடி - கோயம்புத்தூர் செம்மொழி எக்ஸ்பிரஸ் ஜனவரி 13, 15 மற்றும்  17 ம் தேதிகளில்  ஒரு முன்பதிவு பெட்டி அதிகரிக்கப்படும்.
ரயில் எண்.22668 கோயம்புத்தூர் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ஜனவரி 12, 14  மற்றும் 16 ம் தேதிகளில்  ஒரு முன்பதிவு பெட்டி அதிகரிக்கப்படும்.
ரயில் எண்.22667 நாகர்கோவில் - கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ஜனவரி 13, 15 மற்றும் 17ம் தேதிகளில்  ஒரு முன்பதிவு பெட்டி அதிகரிக்கப்படும்.
ரயில் எண்.12243 சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் 13ம் தேதி   ஒரு சேர்கார்   பெட்டி  அதிகரிக்கப்படும். 

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

ரயில் எண்.12244 கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் 13.01.2024 ஒரு குளிர் சாதன  ஒரு சேர்கார்  ரயில் பெட்டி  அதிகரிக்கப்படும். 

From around the web