அரசியலமைப்பு நாள்... மாநிலம் முழுவதும் ...பள்ளி, கல்லூரிகளில் போட்டிகள் நடத்த உத்தரவு!
இந்திய அரசியலமைப்பு 76 ஆண்டு நிறைவை முன்னிட்டு நவம்பர் 26-ஆம் தேதி மாநிலம் முழுவதும் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை ஒரே நேரத்தில் வாசிக்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மக்களாட்சியின் உயரிய தத்துவங்களைக் கொண்ட நம் அரசியலமைப்பை அண்ணல் அம்பேத்கர் உருவாக்கித் தந்தமைக்கான மரியாதையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சமூக நீதி, சமநிலை, மக்கள் நலன் ஆகிய அடிப்படைச் சிந்தனைகளை நிலைநிறுத்த தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் சிறார்களின் உரிமைகளை மேம்படுத்த அரசியலமைப்பின் 15(3) பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தை மனதில் கொண்டு, விடியல் பயணம், புதுமைப்பெண், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் போன்ற பல முக்கிய திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன என்று அரசு வலியுறுத்தியுள்ளது. மக்களின் அடிப்படை உரிமைகள், ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவை தமிழ்நாடு அரசின் மையக் கொள்கைகளாக இருப்பதாகவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் 26-ஆம் தேதி காலை 11 மணிக்கு தலைமைச் செயலகம், உயர் நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், அனைத்து அரசு துறை அலுவலகங்கள், சார்நிலை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகள் என மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து இடங்களிலும் அரசியலமைப்பின் முகப்புரை வாசிக்கப்படும். அதோடு, பள்ளி-கல்லூரிகளில் அரசியலமைப்பு அடிப்படைக் கொள்கைகள் குறித்த பேச்சுப் போட்டி, கருத்தரங்கு, வினாடி-வினா போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
