பொங்கல் தொகுப்புடன் ரூ.5,000 ரொக்கம் வழங்க கோரிக்கை கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்!

 
கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கட்டுமானத் தொழிலாளர்களுக்குப் பொங்கல் தொகுப்புடன் ரூ. 5,000 ரொக்கத் தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தூத்துக்குடியில் சி.ஐ.டி.யு. (CITU) கட்டுமானத் தொழிலாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில், கோரம்பள்ளம் அரசு ஐ.டி.ஐ. அருகில் உள்ள தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்குச் சங்க மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மாரியப்பன் தலைமை வகித்தார்.

பொங்கல் பரிசு தொகுப்பு

கட்டுமானத் தொழிலாளர்களுக்குத் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டுப் பண்டிகைத் தொகுப்புடன் கூடுதலாக ரூ. 5,000 வழங்கிட வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாகும். இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்டுமானத் தொழிலாளர்கள் பலர் திரளாகக் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!