பயங்கர ஆயுதங்களுடன் ‘ரீல்ஸ்’ வெளியிட்ட நர்ஸ் !! தட்டித் தூக்கிய காவல்துறை!!

 
வினோதினி என்கிற தமன்னா

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ வெளியிட இன்றைய இளைஞர்களும், இளம்பெண்களும் ஆபத்தான விளையாட்டுகளை கையில் எடுக்கின்றனர். இதில் பலரும் விபத்தில் சிக்கி காயம் அடைந்துள்ளனர். சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கிறது. அதேநேரம் அச்சுறுத்தும் வகையில் வன்முறையை ரீல்ஸ் வெளியிட்டும் வருவது அதிகரித்து வருகிறது,

அந்த வகையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயங்கர ஆயுதங்களுடன் ரீல்ஸ் வெளியிட்ட நர்ஸை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ‘பிரகா சகோதரர்கள்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளைஞர்கள் குழு பொம்மை துப்பாக்கிகள் மற்றும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ரீல்ஸ் வெளியிட்டு வந்தனர். 

வினோதினி என்கிற தமன்னா

இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை கோவையை சேர்ந்த பிரபல ரவுடிகள் பின்பற்றி வந்தனர். இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தமன்னா என்ற பெயரில் வினோதினி என்கிற (23) இளம்பெண்ணும் பிரகா சகோதரர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் தீவிர உறுப்பினராக இருப்பவர்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயங்கர ஆயுதங்களுடன் புகைப்பிடிப்பது போன்ற வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இவர் பல ஆண்டுகளாக கோவையில் உள்ள பீளமேடு, காளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வருகிறார். ஏற்கனவே கோவையில் அண்மைக்காலமாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இளம்பெண்ணின் இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து கோவை மாநகர போலீஸ் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறுகையில், இன்ஸ்டாகிராம் கணக்குகளில் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோக்களை வெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். இளம்பெண் வினோதினி என்ற தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது போன்று 2வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

வினோதினி என்கிற தமன்னா

அவர் வீடியோ வெளியிடுவதால் மட்டும் நடவடிக்கை இல்லை. அந்தப் பெண் பணக்கார குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் நட்பாக பழகி, பின்னர் நண்பர்களின் உதவியுடன் பணம் பறித்துள்ளார். வீடியோக்கள் மூலம் 2 ரவுடி குழுக்களுக்கு இடையே பகையை வளர்க்கவும் முயற்சி செய்துள்ளார், என்றார். கடந்த 2021ல்  பீளமேடு போலீசார் வினோதினி என்கிற தமன்னா மற்றும் சூர்யா என்கிற சூர்யபிரசாத் ஆகியோரை 2 கிலோ 250 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்துள்ளனர்.  

 ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web