மக்களவையில் அமளி தொடர்ச்சி… பிப்.9 வரை அவை ஒத்திவைப்பு… 8 எம்பிக்கள் இடைநீக்கம்!
மக்களவையில் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை பிப்ரவரி 9 காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து மூன்றாவது நாளாக எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவை செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன.
முன்னாள் ராணுவத் தளபதி நரவணே எழுதிய புத்தகத்தில் சீன எல்லைப் பிரச்னை குறித்து குறிப்பிட்ட விவகாரம் தொடர்பாக பேச ராகுல் காந்தி அனுமதி கேட்டிருந்தார். ஆனால் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்ட 8 எதிர்க்கட்சி எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அமளி காரணமாக குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி அளிக்க இருந்த பதிலுரையும் ரத்து செய்யப்பட்டது. இன்று காலை அவை கூடியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் பதாகைகளுடன் மீண்டும் அமளியில் ஈடுபட்டதால் முதலில் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்ட அவை, பின்னர் பிப்ரவரி 9 காலை வரை ஒத்திவைக்கப்பட்டது. அவைத் தலைவர் ஓம் பிர்லா, அமளியால் பல மணி நேரம் வீணாகி உள்ளதாகவும், அவை சுமூகமாக நடைபெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
