தொடரும் அதிர்ச்சி!! சோளப்பூரியில் கரப்பான் பூச்சி!! இருவர் மருத்துவமனையில் அனுமதி!!

 
பூபாலன்

உணவே மருந்தாக , ஆரோக்கியத்தின் மூலதனமாக கொண்டு வாழ்ந்தவர்கள் நம் முன்னோர். ஆனால் தற்போதைய காலதில் உணவில் கலப்படங்கள் அதிகரித்து வருவது அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் மசால் தோசையில் பூரான் இருந்தது சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. உணவகங்களின் அலட்சியமே இதற்கு காரணம் என்கின்றனர் வாடிக்கையாளர்கள்.  கலப்படங்கள் குறித்த செய்தி வரும் போது மட்டும் தான் வைரலாகிறது. அடுத்த கணமே மீண்டும் யாரும் அதை கண்டுகொள்வதுமில்லை. மெனக்கெடுவதும் இல்லை.

பூபாலன்

அந்த வகையில் தற்போது மயிலாடுதுறையில் உள்ள உயர்தர சைவ உணவகத்தில் சோளாப்பூரியில் கரப்பான்பூச்சி வெந்து கிடந்தது கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து நகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பட்டமங்கலத்தெருவில் உள்ள புகழ்பெற்ற சைவ உணவகமான காளியாகுடி ஹோட்டலில் வழக்கறிஞர் பூபாலன், கலியமூர்த்தி இருவரும் உணவருந்தினர். இதில்  சோளாப்பூரி உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக குற்றம் சாட்டினர். இதையடுத்து ஒவ்வாமை ஏற்பட்ட அவர்கள் மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். 

கரப்பான்பூச்சி

இச்சம்பவம் குறித்து உடனடியாக மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.  இதன் அடிப்படையில் மயிலாடுதுறை நகராட்சி உணவு பாதுகாப்புதுறை அலுவலர்  திடீரென குறிப்பிட்ட ஹோட்டலில் சோதனை நடத்தினார். உணவில் கிடந்தது கரப்பான்பூச்சி இல்லை, வெட்டுக்கிளி என்றனர் உணவக நிர்வாகத்தினர்.  மேலும் சோதனையில்  சமையலறை பகுதி தூய்மையாக பராமரிக்கப்படவில்லை. அத்துடன் சமையல் பொருட்கள் முறையாக மூடி வைக்கவில்லை என்பதும் தெரிய வந்தது. உணவு பாதுகாப்பு விதிமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படாததால் உணவகத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும்  உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் 7 நாட்களுக்குள் குறைபாடுகளை சரிசெய்து அறிக்கை வழங்க  வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web