தொடர்விடுமுறை... தமிழக மலைபிரதேசங்களிலும், நீர்வீழ்ச்சிகளிலும் குவியும் சுற்றுலா பயணிகள்!

 
சுற்றூலா  கொடைக்கனால் ஊட்டி ஏற்காடு

தொடர் விடுமுறையைத் தொடர்ந்து, தமிழகத்தின் மலைப்பிரதேசங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர். இதனால் சுற்றுலா சார்ந்த தொழில்கள் விறுவிறுப்படைந்துள்ளன.

கொடைக்கானல்

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தற்போது உறைபனி சீசன் தொடங்கியுள்ளது. நட்சத்திர ஏரி புல்வெளி, பாம்பார்புரம், அப்சர்வேட்டரி போன்ற இடங்களில் அதிகாலை வேளையில் புற்களின் மீது உறைபனி படர்ந்து காணப்படுகிறது. இதை ரசிக்கப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். விடுமுறை கூட்டத்தால் கொடைக்கானல் மலைச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

உதகை நீலகிரி

ஊட்டி: 

ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் படகு இல்லங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் குவிந்துள்ளனர். கூடலூர் - ஊட்டி சாலை, குன்னூர் - ஊட்டி சாலைகளில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அதிகரித்ததால் அடிக்கடி போக்குவரத்து முடங்கியது. கமர்சியல் சாலை மற்றும் உணவகங்களில் மதிய நேரங்களில் கூட்டம் அலைமோதுகிறது. தங்கும் விடுதிகள் அனைத்தும் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு நிரம்பியுள்ளன.

ஏற்காடு: 

சேலம் அருகே உள்ள ஏற்காட்டில் நிலவும் இதமான சீதோஷ்ண நிலையை அனுபவிக்கப் பயணிகள் திரண்டுள்ளனர். ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்யப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுற்றுலாப் பயணிகளின் வருகையால் அங்குள்ள தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஒகேனக்கல்

ஒகேனக்கல்: 

தர்மபுரி மாவட்டத்தின் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்குத் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களிலிருந்தும் பயணிகள் அதிகளவில் வந்துள்ளனர். இதனால் மெயின் அருவி மற்றும் பரிசல் துறையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!