தமிழகத்தில் தொடரும் அவலம்... பிளஸ்-1 பொதுத்தேர்வை 11,070 மாணவர்கள் எழுதவில்லை!

 
தேர்வு

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாகவே பொதுத்தேர்வை ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் எழுதாமல் இருக்கும் அவல நிலை நீடித்து வருகிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வை பத்தாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதாத நிலையில், நேற்று நடைபெற்ற 11ம் வகுப்பு பொதுத்தேர்வையும் 11,070 மாணவ, மாணவிகள் எழுதாமல் இருந்துள்ளனர். 

நேற்று முன்தினம் 12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழ் உள்பட இதர மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. வருகிற 27ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் 2 முதல் 4 நாட்கள் வரை இடைவெளி விட்டு நடைபெறுகிறது.

தேர்வு

தேர்வுக்காக 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வை தமிழ்நாட்டில் உள்ள 7 ஆயிரத்து 557 பள்ளிகளில் இருந்து, 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 மாணவர்கள், 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 18 ஆயிரத்து 369 பேர் எழுத இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேர்வு

இந்த நிலையில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் இன்று நடந்த மொழிப்பாடத்தேர்வை 11,070 பேர் எழுதவில்லை என்றும் 8,07,299 பேர் தேர்வு எழுதியுள்ளனர் என்று அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web