தொடர் சரிவு... டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 51 காசுகள் சரிந்தது!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவி ஏற்றதில் இருந்தே இந்திய பங்குச்சந்தை கதறிக் கொண்டிருக்கிறது. பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியைக் கண்டிருக்கும் நிலையில், நாளுக்கு நாள் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்து வருகிறது.
இந்திய ரூபாய் வீழ்ச்சியை சந்தித்து வருவதால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வர்த்தக கட்டணங்கள் குறித்த நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் இறக்குமதியாளர்களுக்கு மாத இறுதியில் டாலர் தேவை காரணமாக இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 51 காசுகள் சரிந்தன.
கடைசியில் ரூ.87.23 ஆக நிலைபெற்றது. வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணியில், இந்திய ரூ.86.83 ஆக தொடங்கி நாள் முழுவதும் சரிந்த நிலையில், நிலைபெறுவதற்கு முன்பு 51 காசுகள் சரிந்து ரூ.87.23 ஆக நிலைபெற்றது.நேற்று பிப்ரவரி 24ம் தேதி திங்கட்கிழமை அன்று இந்திய ரூபாய் 4 காசுகள் சரிந்து ரூ.86.72ஆக முடிந்தது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!