தொடர் உல்லாசம்... 5 மாத கர்ப்பம்... திருமணத்திற்கு மறுத்ததால் காதலி தற்கொலை!

 
திருமணத்துக்கு மறுத்த காதலன்... கர்ப்பிணி காதலி தூக்கிட்டு தற்கொலை!

இருவரும் காதலித்து வந்த நிலையில், அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். இதில் இளம்பெண் கர்ப்பமடைந்த நிலையில், திருமணம் செய்துக் கொள்ள காதலன் மறுத்ததால் 5 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில்  ம.கொளக்குடி கிராமம் எல்.இ.பி. நகரில் வசித்து வருபவர் இளங்கோவன், மணிமேகலை தம்பதியர். இவர்களது மகள் பூமிகா(24). இளங்கோவன் உயிரிழந்த நிலையில் மணிமேகலை, கேரளாவில் தங்கியிருந்தபடியே கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். தாய் கேரளாவில் தங்கியிருந்து வேலைப் பார்த்து வந்ததால், பூமிகா தனது அண்ணன், அக்காளுடன் ம.கொளக்குடியில் வசித்து வந்தார். 

கடலூர்

இந்நிலையில், பூமிகாவும் அதே பகுதியில் வசித்து வரும்  26 வயது இளைஞர்  ஒருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் நெருங்கி பழகியதால் பூமிகா 5 மாத கர்ப்பமாக இருந்தார். இது குறித்து பூமிகா தனது காதலனிடம் தொிவித்து தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். காதலன் திருமணம் செய்துக் கொள்ள மறுத்து விட்டதால் பூமிகா மனமுடைந்தார்.  

தற்கொலை

இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் தங்கி வேலை பார்க்கும் தனது தாய் மணிமேகலை வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூமிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. இச்சம்பவம் குறித்து தகவலின் பேரில் விரைந்து சென்று போலீசார் பூமிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?