தொடர் மழை... ஆர்ப்பரிக்கும் தண்ணீர்... மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க மீண்டும் தடை!

 
குற்றாலம் ஐந்தருவி

தென்காசி மாவட்டத்தில் தொடர் மழையால் குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

குற்றாலம்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தற்போது தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கொல்லிமலை, குற்றாலம்

இந்நிலையில், கடந்த சில தினங்களாக சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுவந்த நிலையில் அருவிகளுக்கு தற்போது நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது