தொடர் விடுமுறை... சென்னை - கோவை இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை மார்ச் 28ம் தேதி முதல் ஏப்ரல் 1ம்தேதி வரை தொடர்ந்து 4 நாட்களுக்கு தெலுங்கு வருட பிறப்பு, ரமலான், வார விடுமுறை என அடுத்தடுத்து விடுமுறை தினங்களாக உள்ள நிலையில், சென்னை - கோவை இடையே சிறப்பு ரயில் சேவையை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இன்று முதல் அடுத்தடுத்து 2 நாட்கள் மட்டும் வழங்கப்படும் இந்த சிறப்பு ரயில் சேவையில், நாளை மார்ச் 28ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 11.50 மணிக்கு, வண்டி எண் 06027 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள் மார்ச் 29ம் தேதி காலை 9 மணிக்கு கோவை போத்தனூர் ரயில் நிலையத்திற்கு சென்று சேரும்.
மறுமார்க்கமாக அதைப் போலவே வரும் மார்ச் 31ம் தேதி இரவு 11.30 மணிக்கு, வண்டி எண் 06028, கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் ஏப்ரல் 1ம் தேதி காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!