ஒப்பந்தகாரரின் காமெடி கழிவறைகள்... ஒரே நேரத்தில் 2 பேர் அருகருகே 2 !

 
ஒப்பந்தகாரரின் காமெடி கழிவறைகள்... ஒரே நேரத்தில் 2 பேர்   அருகருகே 2 ! 
இந்தியா முழுவதும் ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் கழிவறைகள் கட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் சர்குஜா மாவட்டத்தில் உள்ள லகான்பூர் வட்டத்தின் பெல்ட்கி கிராம பஞ்சாயத்தின் சார்பு கிராமமான ஆல்கா பெண்டோபானியில் கட்டப்பட்ட  கழிப்பறை தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரே அறைக்குள்  அருகருகே 2 கழிப்பறைகள்  பொருத்தப்பட்டுள்ளன. இது சுகாதாரக் கட்டிடமா, காமெடி கட்டிடமா என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரூ.24,000 செலவில் கட்டப்பட்ட இந்தக் கழிப்பறை, அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் அலட்சியத்தையும், திட்டங்களின் மேற்பார்வை இல்லாமையையும்  காட்டுவதாக நெட்டிசன்கள் கமெண்ட் அடித்துள்ளனர்.  “ஒரே நேரத்தில் இரண்டு பேர் கழிப்பறையைப் பயன்படுத்தலாம்” என்ற எண்ணத்தோடு இந்த மாதிரி அமைப்பு செய்திருக்கலாம். இந்த ‘நவீன தொழில்நுட்பத்தை’ மக்கள் பயன்படுத்தவே இல்லை. மக்கள் இன்னும் திறந்த வெளியில்தான் மலம் கழிக்கின்றனர். இது பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான ஸ்வச் பாரத் மிஷனின் நோக்கத்தை கேள்விக்குள்ளாக்குகிறது.
இது குறித்து  சம்பந்தப்பட்ட தொகுதி ஒருங்கிணைப்பாளரும் கிராம செயலாளருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு விளக்கம் கோரப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி  அந்த பகுதியில் கட்டப்பட்ட பல கழிப்பறைகள் முழுமையடையாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.  சில இடங்களில் ‘புதுமையான’ தொழில்நுட்பங்கள் என்ற பெயரில் தேவையற்ற வடிவமைப்புகள் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற அலட்சியங்கள் மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது