அச்சச்சோ... அரைகுறை ஆடைகளுடன் அனுமன் சிலை முன்பு அழகிகள்! பாஜக செஞ்ச வேலையா இது?!

அனுமன் படத்தின் முன்பு நின்று பெண் பாடி பில்டர்கள் போஸ் கொடுத்த வீடியோ வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் பகுதியில் கடந்த 4 மற்றும் 5ம் தேதிகளில் 13ஆவது மிஸ்டர் ஜூனியர் பாடிபில்டிங் போட்டி நடைபெற்றது. இதில் பெண் பாடிபில்டர்கள் பலரும் பங்கேற்றனர்.
அப்போது போட்டி நடக்கும் இடத்தின் முன்னால் அனுமன் உருவப்படம் இருந்துள்ளது. அந்த படத்தின் முன்பு நின்று பெண் பாடி பில்டர்கள் தங்கள் உடல் கட்ஸ்களை காட்டி போஸ் கொடுத்தனர். இந்த போட்டி தொடர்பான வீடியோ வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதன் மூலம் பிரம்மச்சரிய கடவுளான அனுமனை அவமதித்து விட்டதாக காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றம் சாட்டியதோடு, போட்டி நடந்த இடத்தில் நேற்று கங்கை நதி நீர் தெளித்து அனுமன் மந்திரங்கள் ஓதினார்கள். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இந்த விவகாரத்தில் இந்து களத்தில் இறங்கவில்லை ஏனெனில் இந்த சர்ச்சையான பாடிபில்டிங் போட்டியை நடத்தியதே பாஜக தான்.
போபால்: அனுமன் சிலைக்கு முன்பு அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிதான் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
— Kadal Tamilvanan 🇮🇳 (@KadalTamilvanan) March 7, 2023
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால்,
இந்த நிகழ்ச்சியை நடத்தியதே பாஜக என்பதுதான் pic.twitter.com/SNrRdclf8a
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர்கள் கூறுகையில், இதில் ஈடுபட்டவர்களை அனுமன் தண்டிப்பார் என்றனர். இதேபோல் பாஜகவின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள், இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மகளிர் பாடிபில்டிங் போட்டி நடத்துவதில் பிரச்சனை இல்லை, ஆனால் அனுமன் படத்தைத வைத்து அரைகுறை ஆடையுடன் போஸ் ஏன் கொடுக்கவேண்டும் என கூறினர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க