சர்ச்சையில் சிக்கிய ஜடேஜா! வீடியோ வெளியாகி பரபரப்பு!

 
ஜடேஜா

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் பந்தை ரவீந்திர ஜடேஜா சேதப்படுத்தியதாக வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்து பிசிசிஐ, அந்த வீடியோ வெளியிட்டு, பந்தை ஊடகங்கள் பரப்புவது போல், ஜடேஜா சேதப்படுத்தவில்லை.. அவர் விரல்களில்மருத்தை தடவுகிறார் என்று விளக்கம் கொடுத்திருக்கிறது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. நாக்பூரில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணிக்கு வழக்கம் போல பேட்டிங்கில் அதிர்ச்சி மட்டுமே மிஞ்சியது. ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து பெரும் ஏமாற்றத்தை பெற்றது.


அந்த அணியில் மார்னஸ் லபுனேஸ் (49), ஸ்டீவ் ஸ்மித் (37) ஆகியோரை தவிர மற்றவர்கள் சொதப்பியதால் 177 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் விக்கெட்டிற்கே 77 ரன்களை சேர்த்து வலுவாக விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது ரவீந்திர ஜடேஜா செய்த ஒரு விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆஸ்திரேலியா 120 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்திருந்த போது ஜடேஜா பந்துவீச வந்தார். அப்போது பந்து வீசும் முன் திடீரென முகமது சிராஜிடம் சென்ற ஜடேஜா, அவரின் கைகளில் இருந்து ஏதோ ஒரு திரவியத்தை எடுத்து தனது விரல்களில் பூசிக்கொண்டார்.

இடதுகை பவுலரான ஜடேஜா எந்தெந்த விரல்களில் பந்தை டேர்ன் செய்கிறாரோ அங்கு மட்டும் அதனை தடவிக்கொண்டார். இந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரவீந்திர ஜடேஜா விதிகளை மீறி பந்தை சேதப்படுத்தினாரா என்ற கோணத்தில் ஆஸ்திரேலிய ஊடகங்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். முன்னாள் வீரர்களும் இதுகுறித்து கேள்வி எழுப்பினர்.

Jadeja

இதனையடுத்து இந்த விவகாரத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது. அதாவது முதல் நாள் ஆட்டம் முடிந்த பிறகு இந்திய வீரர் ஜடேஜா மற்றும் ரோகித் சர்மா ஆகியோரை போட்டி நடுவர் அழைத்து விசாரணை நடத்தியுள்ளார். வீடியோவும் பார்க்கப்பட்டுள்ளது. அப்போது ஜடேஜா கையில் தடவியது ஒரு வகையான வலி நிவாரண மருந்து தான் என்றும், விதிகளை எதுவும் மீறவில்லை என்றும் இந்திய அணி தரப்பில் கூறப்பட்டது.

இதனால் ஜடேஜா மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வழக்கமாக பந்துகள் கைகளில் இருந்து வழுக்கி கொண்டு செல்லாமல் இருக்க, கிரிப்பிற்காக திரவியங்களை பயன்படுத்துவார்கள். இது விதிகளுக்கு உட்பட்ட ஒன்று தான். ஒருவேளை ஜடேஜா அதுபோன்று கிரிப்பிற்காக செய்திருந்தாலும், எந்த தவறும் இல்லை என வல்லுநர்கள் ஆதரவுக்குரல் கொடுத்துள்ளனர்.

இது குறித்து ட்வீட் போட்டுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், ஜடேஜா தனது விரலில் என்ன பூசிக்கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு இதுபோன்று பார்த்ததே கிடையாது என பதிவிட்டுள்ளார். இதனால் புதிய விஷயத்தை எதையோ ஜடேஜா பயன்படுத்துகிறாரா?, அவர் செய்தது சரிதானா என்ற கோணத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web