சர்ச்சை வீடியோ... பெண் மருத்துவரின் ஹிஜாப்பை இழுத்து அகற்ற முயன்ற முதல்வர் நிதீஷ்குமார்!
பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், பாட்னா நகரில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் ஒரு பெண் மருத்துவரிடம் நடந்து கொண்ட விதம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஹிஜாப் அணிந்து வந்த அந்தப் பெண் மருத்துவருக்குச் சான்றிதழை வழங்கியபோது, நிதிஷ் குமார் அவர் ஹிஜாப்பை நீக்குமாறு சைகை காட்டியதுடன், அந்தப் பெண் அதற்குச் செயல்படுவதற்கு முன்பே, அவருடைய வாய் மற்றும் கன்னம் தெரியும்படி ஹிஜாப்பை இழுத்து விட்டார்.
ये बिहार के मुख्यमंत्री नीतीश कुमार हैं।
— Congress (@INCIndia) December 15, 2025
इनकी बेशर्मी देखिए- एक महिला डॉक्टर जब अपना नियुक्ति पत्र लेने आई तो नीतीश कुमार ने उनका हिजाब खींच लिया।
बिहार के सबसे बड़े पद पर बैठा हुआ आदमी सरेआम ऐसी नीच हरकत कर रहा है। सोचिए- राज्य में महिलाएं कितनी सुरक्षित होंगी?
नीतीश कुमार… pic.twitter.com/2AO6czZfAA
இந்தச் சம்பவம் வீடியோவில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேடையில் இருந்த சிலர் இதைக் கண்டு சிரித்தபோதும், துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி, நிதிஷ் குமாரைத் தடுக்க முயற்சிப்பது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்தச் செயல், பெண்களுக்கு அதிகாரமளிப்பதாகக் கூறும் நிதீஷ் குமாரின் செயல்பாடுகளுக்கு முரணாக இருப்பதாகப் பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ பரவியதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சிகள் நிதீஷ் குமாரை கடுமையாகச் சாடியுள்ளன.
கட்சியின் செய்தித் தொடர்பாளர் அகமது, நிதிஷ் குமார் இந்தப் பெண்ணின் ஹிஜாப்பை இழுத்ததன் மூலம், பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் அரசியல் என்ன என்பதைத் தெளிவாகி விட்டார் என்று கூறியுள்ளார். அவருடைய செயல் வெட்கக்கேடானது மற்றும் வெறுப்பூட்டுகிறது என்றும் காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது. அவருடைய மனநிலை முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டதற்கான சான்று இது என்றும் எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

கடந்த காலங்களிலும் நிதீஷ் குமார் இது போன்றுச் சில சர்ச்சைக்குரியச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் தேசிய கீதம் இசைத்தபோது சிரிப்பது, பேசுவது, நிகழ்ச்சிகளில் அறிவிப்புக்கு முன்பே கைகுலுக்கச் செல்வது, அதிகாரியின் தலையில் மரக்கன்றை வைப்பது போன்ற நடவடிக்கைகள் கேமராவில் பதிவாகிச் சர்ச்சையானது. அவருடைய உடல்நலம் குறித்தும் எதிர்க்கட்சிகள் அவ்வப்போதுக் கேள்வி எழுப்பி வருகின்றன. இந்த முறை ஹிஜாப் விவகாரத்தில் அவர் நடந்து கொண்ட விதம், மீண்டும் பெரிய அளவில் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
