தொடரும் சர்ச்சை!! ஷர்மிகா மீது மேலும் 2 பேர் புகார்!!

 
ஷர்மிகா

கோவை மாவட்ட சித்த மருத்துவர் ஷர்மிகா குறித்த  வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  அதிலும் குறிப்பாக  உடல் எடை குறைப்பு, கர்ப்பம் தரித்தல் குறித்த ஷர்மிகாவின் வீடியோக்கள் பெரும் சர்ச்சையை உருவாக்கி வருகிறது. 

ஷர்மிகா


அதன்படி தினமும் 4  ஸ்பூன் நெய் சாப்பிட்டால் முகம் பொலிவாகும். ஒரு குலாப் ஜாமுன் சாப்பிட்டால் ஒரே நாளில்  3  கிலோ எடை கூடும். பெண்கள் கவிழ்ந்து படுத்தால் மார்பக புற்றுநோய் உண்டாகும். பெண்கள் நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகும்  என பல  சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி இருந்தார்.  இதனை தொடர்ந்து இந்திய மருத்துவ ஆணையரகம் தாமாக முன் வந்து  2 கட்ட விசாரணை நடத்தியுள்ளது.

ஷர்மிகா

இந்த விசாரணை மேலும் தொடரும் என  தெரிவித்துள்ள நிலையில்  தற்போது, சித்த மருத்துவர் ஷர்மிகாவின் வீடியோவில் கூறிய மருத்துவ அறிவுரைகளின்படி  சிகிச்சை எடுத்துக் கொண்டதில் தங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டதாக 2 பேர் இந்திய மருத்துவ ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web