அமைச்சர் நேருவின் தொகுதியில் சர்ச்சை.. அடுத்தடுத்து ‘சாராய’நெடி.. கதறும் இளைஞர்கள்! குமுறும் கம்யூனிஸ்ட் கவுன்சிலர்!

 
சாராயப்பட்டறை தெரு திருச்சி

சாராயம், கள்ளச்சாராயம், டாஸ்மாக், செந்தில் பாலாஜி இவை தான் தமிழகத்தில் தற்போதைய பேசு பொருள் விவகாரம். தமிழகத்தில் விழுப்புரம், மரக்காணம்,  தஞ்சாவூர் ஆகிய ஊர்களில் நடந்த கள்ளச்சாராய மரணம் தற்போது பரபரப்பாக்கி கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகம் மேலும் பரபரப்பாக உள்ளது. எதிர்கட்சிகள் மட்டுமல்லாது கூட்டணி கட்சிகளே குழப்பதில் ஆழ்ந்து கிடக்கிறது.

இந்த இரண்டு வருட ஆட்சியை சாதனை என்பதா? வேதனை என்பதா? தலைவர் பிறந்த நாள் ஜூன் 3ம் தேதி தடபுடலாக கொண்டாடுவதா? மக்களை எப்படி சந்திப்பது? என மில்லியன் டாலர் கேள்விகள் மந்திரிகளின் மண்டையைப் பிளந்து கொண்டிருக்க இந்த விஷயம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது இப்படி ஒரு கட்டுரையை, நம் தினமாலை இணையதளத்தில் நேற்று வெளியிட்டிருந்த நிலையில் அளவில்லா அலைபேசியில் நம்மை திக்குமுக்காட வைத்து விட்டார்கள் வாசகர்கள். உடனே அவங்க ஏரியாவுக்கு தொடர்ந்து அழைப்பு வந்து கொண்டிருந்தது. 

ஏதோ சமூக பிரச்சனை என்று கேட்டால், என்ன தான்யா பிரச்சனை... எண்ணெய்(சாரயம்)தான்யா பிரச்சனை... என வடிவேலு பாணியில் எதிர்முனையில் ஒலிக்க ஸ்பாட்டுக்கு விஜயம் செய்தோம். நம்மை முதலில் எதிர்கொண்டவர் திருச்சி மாநகராட்சியின் 23வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுரேஷ்.

சார் இது என்னுடைய வார்டு பகுதியில் உள்ள கீழ சாராய பட்டரை தெரு. திருச்சி மாநகராட்சி ஆவதற்கு முன்பு நகராட்சியாக இருந்த பொழுது கீழ சாராயப் பட்டறை தெரு பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என்று அப்பொழுது கம்யூனிஸ்ட் கட்சி மிகப்பெரிய போராட்டத்தை எல்லாம் நடத்தியது.ஆனா ஒன்றும் பிரயோஜனம் இல்லை.

நேரு

பொதுமக்கள் அப்போது இருந்த நகராட்சி வார்டு உறுப்பினரைத் தாக்கிய சம்பவங்கள் கூட நடந்தது. 7 ஆண்டுகள் நீதி மன்றத்தில் வழக்கும் நடைபெற்றது. தொடர்ந்து தற்பொழுது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மாநகராட்சி 23வது வார்டில் வெற்றி பெற்று நான் கவுன்சிலராக இருக்கிறேன். திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இந்த தெருவின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு ஒன்பதாம் மாதம் நடந்த மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்திருக்கிறேன். இது மட்டுமில்லாமல்  ஜாதி பெயரில் உள்ள தெருக்களின்  பெயர்களையும் நீக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளேன் என்றார். 

பள்ளி கல்லூரியில் பயிலும் மாணவரிடம் உங்கள் தெரு பெயர் முகவரியை கேட்டால் இதனை உச்சரிக்கும் பொழுது அவர்கள் கூச்சப்படுவதுடன் கோபமாக தன்னிடம் வருவதாகவும் தெரிவித்தார். தற்போது தமிழகத்தில் சாராயம் என்ற வார்த்தை சர்ச்சைக்கு உள்ளாகி உள்ள நிலையில் இப்பெயரை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் மத்தியிலும் கோரிக்கை எழுந்துள்ளது.

திருச்சி சாராயப்பட்டறை

இப்பகுதி திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. மேற்கு சட்டமன்ற தொகுதியின்  சட்டமன்ற உறுப்பினராக உள்ள அமைச்சர் கே. என். நேரு அவர்கள் இதற்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கே.என்.நேருவின் சொந்த ஊரில் ‘சாராயக்கடை சந்து’ என்கிற பெயரில் இன்னமும் ஒரு தெரு இருந்து வருகிறது. பார்க்கும் இடங்களில் எல்லாம் திருக்குறளை எழுதி ரசித்தார்கள் பேரறிஞர் அண்ணாவும்,கலைஞர் கருணாநிதியும். வருங்காலம் இதைப் பார்த்து உத்வேகம் பெறும் என்று. ஆனால், இவர்கள் ஏன் இன்னமும் சாராயப் பெயரில் தெருக்களை விட்டு வைத்திருக்கிறார்கள் என்று புலம்புகிறார்கள் தெருவாசிகள்.

இப்பகுதியில் உள்ள மக்களின் வாக்காளர் அடையாள அட்டை ,ஆதார் அட்டை ஆகியவற்றில் கீழ சாராயப் பட்டறை  தெரு என்றே உள்ளது. அரசாங்கம் பதிவேட்டில் இருந்து இப்பெயரை நீக்கி தமிழ் பெயர்களை வைக்க வேண்டும் என தற்போது பொதுமக்களிடமும் மாமன்ற உறுப்பினரிடமும் கோரிக்கை வலுத்து வருகிறது.

கள்ளச்சாராயத்தை ஒழிக்க முற்படும் அரசு இதுபோன்ற சாராயப் பெயர்களையாவது உடனடியாக அகற்ற வேண்டும் என்பதிலாவது முனைப்பு காட்ட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. அமைச்சரும் மாநகரத் தந்தையும் கூடிய விரைவில் ஆவண செய்வார்கள் என்று நம்புவோமாக 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web