லண்டன் உணவகத்திற்கு எதிரான மூடல் உத்தரவு சர்ச்சை!
லண்டனின் ரெஜெண்ட் சாலையில் Nearly 100 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் புகழ்பெற்ற வீராசாமி இந்திய உணவகம், இடத்தை காலி செய்ய வேண்டும் என பிரிட்டனின் கிரவுன் எஸ்டேட் வழங்கிய உத்தரவால் சர்ச்சை எழுந்துள்ளது. ஜூன் மாதத்தில் 100 ஆண்டுகள் குத்தகைக் காலம் முடிவடைந்த நிலையில், மேல் தள அலுவலக வசதிகளை விரிவுபடுத்த வேண்டும் எனக் கூறி, குத்தகை நீட்டிப்பை நிராகரித்துள்ளனர்.
இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உணவகம் தரப்பு நீதிமன்றம் நாடியுள்ளது. குத்தகை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நிவாரணம் கோரியுள்ளதால், வழக்கு அடுத்த ஆண்டு விசாரணைக்கு வர உள்ளது. அதுவரை உணவகம் இயல்புபோல் செயல்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
வீராசாமி உணவகம், லண்டனில் மிகப் பழமையான இந்திய உணவகமாக கருதப்படுவதோடு, மறைந்த ராணி எலிசபெத், முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் இங்கே உணவருந்திய வரலாறும் உள்ளது. இதை பாதுகாக்க வேண்டும் என பிரிட்டனின் பிரபல சமையல் கலை நிபுணர்களும் குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
