முகநூலில் பதிவிட்ட சர்ச்சை வீடியோ.. பாஜகவின் ஐ.டி. அணி நிர்வாகி கைது!

 
சுபாஷ் சுயம்பு

கன்னியாகுமரி மாவட்டம் தென் தாமரைகுளத்தை சேர்ந்த சுபாஷ் சுயம்பு என்பவர், பாஜகவின் ஐடி அணியில் மாவட்ட துணை தலைவராக உள்ளார். மேலும் தென் தாமரை குளம் பேரூராட்சியின் வார்டு கவுன்சிலரும் ஆவார். இவர் கடந்த 2 தினங்களுக்கு முன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட கருத்து ஒன்று சர்ச்சையானது.

சுபாஷ் சுயம்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பும் வகையில் சர்ச்சையாக பதிவிட்டுள்ளார். இது குறித்து திமுக தரப்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், இரு பிரிவினர் இடையே கலவரத்தை தூண்டும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும் சுபாஷ் சுயம்பு ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். எனவே மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பிய அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியிருந்தனர். 

ஸ்டாலின்

இதையடுத்து, சைபர் கிரைம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியது தெரியவந்தது. இதையடுத்து, பாஜக நிர்வாகி சுபாஷ் சுயம்பு மீது  153 a , 505 (1) , 506(2) , 504  , 295 a உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜகவின் ஐடி அணி நிர்வாகி கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web