பரபரப்பு... மருத்துவமனையில் இருந்து தண்டனை கைதி தப்பியோட்டம்!

 
கைதி


தமிழகத்தில் வேலூர் மாவட்டம் காட்பாடியில்  2021ம் ஆண்டு யாசகம் எடுப்பவரை கேரளாவைச் சேர்ந்த பாபு ஷேக் கொலை செய்தார். இது குறித்து நடைபெற்று வந்த வழக்கில் 55 வயது பாபு ஷேக் தண்டனை கைதியாக வேலூர் மத்திய சிறையில் இருந்து வந்தார்.

கைதி
இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக பிப்ரவரி 15ம் தேதி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளது.  

போலீஸ்


இதுகுறித்து சிறைத் துறையினர் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் தப்பிச் சென்றவரை சிறைத் துறையினரும், போலீசாரும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?