குடியிருப்பு கட்டிடத்தில் சமையல் எரிவாயு வெடிப்பால் 16 பேர் பலி!
பாகிஸ்தான் நாட்டின் மிகப் பெரிய துறைமுக நகரமான கராச்சியில் குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட சமையல் எரிவாயு வெடிப்பில் 16 பேர் உயிரிழந்தனர். ரமலான் நோன்பை முன்னிட்டு அதிகாலை உணவு தயாரித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வீட்டில் ஏற்பட்ட திடீர் வெடிப்பால் முழுக் கட்டடமும் இடிந்து சரிந்தது. முதலில் 13 பேர் பலியானதாக தகவல் வெளியானது. பின்னர் இடிபாடுகளில் இருந்து மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆசிஃப் அலி சர்தாரி இரங்கல் தெரிவித்துள்ளார். தேவையான உதவிகளை உடனடியாக வழங்க சிந்து மாகாண அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். கடந்த 2025 ஜூலையில் இஸ்லாமாபாத் நகரிலும் இதேபோன்ற எரிவாயு வெடிப்பில் 8 பேர் உயிரிழந்தது நினைவுகூரப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
