சமையல் எண்ணெய் விலை ஏற்றம்… இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி !

 
எண்ணெய் எண்ணெய்

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கிடையிலான போர் நெருக்கடியால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இதன் தாக்கம் சமையல் எண்ணெய் சந்தையிலும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களில் சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு மூன்று முதல் ஐந்து ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரியகாந்தி, சோயாபீன், பாமாயில் மற்றும் கலப்பு சமையல் எண்ணெய்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உள்நாட்டில் உற்பத்தி குறைவாக இருப்பதால் இந்தியா பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியை சார்ந்துள்ளது. உக்ரைன், ரஷ்யா போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் இறக்குமதியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் வரும் நாட்களில் சமையல் எண்ணெய் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வர்த்தகர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக லிட்டருக்கு பத்து முதல் பதினைந்து ரூபாய் வரை கூட உயரக்கூடும் என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு கூடுதல் செலவுச் சுமை ஏற்படும் என அச்சம் நிலவி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!