சாக்கடை நீரை பக்கெட்டில் பிடித்து சமையல் ? ... அதிர்ச்சி வீடியோ !

 
சாக்கடை சாக்கடை

மகாராஷ்டிர மாநிலம் அகோலா நகரின் திக்ரா சௌக் பகுதியில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு நபர் பிளாஸ்டிக் பக்கெட்டுகளைக் கொண்டு சாக்கடை நீரைச் சேகரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தத் தண்ணீர் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்ற மர்மம் விலகாத நிலையில், அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியும் அருவருப்பும் ஏற்பட்டுள்ளது.

திக்ரா சௌக் பேருந்து நிலையம் அருகே அதிகாலை 4 மணி முதலே போஹா, சமோசா, கச்சோரி போன்ற சிற்றுண்டிகளை விற்கும் தள்ளுவண்டி கடைகள் அதிக அளவில் இயங்குகின்றன. இந்நிலையில், அந்த நபர் பிடிக்கும் சாக்கடை நீர் உணவுகள் தயாரிக்கவோ அல்லது பாத்திரங்களைக் கழுவவோ பயன்படுத்தப்படுகிறதா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. இது பொதுமக்களின் சுகாதாரத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாகப் பார்க்கப்படுவதால், அந்தப் பகுதியில் உணவருந்த மக்கள் தற்போது அச்சப்படுகின்றனர்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டுச் சம்பந்தப்பட்ட நபரைக் கண்டறிய வேண்டும் எனப் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். பொதுவெளியில் இத்தகைய சுகாதாரமற்ற செயல்கள் நடப்பது கண்டிக்கத்தக்கது என்றும், உணவகங்களின் தரத்தைச் சோதிக்கத் தனிப்படை அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. அதிகாரப்பூர்வ விளக்கம் இன்னும் வராத நிலையில், இந்தச் சம்பவம் அகோலா நகரில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!