குளிர்ச்சியான தகவல்!! வெயில் குறையலாம்!! அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழை!!

 
வெயில்

தமிழகத்தில்  பங்குனி , சித்திரை , வைகாசி தான் வெயில் காலம். மாசி மாதம் இன்னும் முழுவதுமாக முடிவடையாத நிலையில்  வெயில் இப்போதே  வாட்டி வதைக்க தொடங்கி விட்டது.தமிழகத்தின்  ஒரு சில இடங்களில் நாளை முதல் வெப்பநிலை குறையக்கூடும்  என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வெயில்

அதில் நாளை பிப்ரவரி 27ம் தேதி செவ்வாய்க்கிழமை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி வரை வெப்பநிலை குறையக்கூடும்.  மேலும் நாளை மறுநாள்  புதன்கிழமை   தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பிப்ரவரி 2 மற்றும் 3ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி , காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளை தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எந்த வகையான மழை? முழு தொகுப்பு!!


சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக  32-33 டிகிரி செல்சியசும்,  குறைந்தபட்ச வெப்பநிலையாக  21-22 டிகிரி செல்சியசும் நிலவக் கூடும். மேலும்  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  அதே நேரத்தில் மீனவர்களுக்கான  எந்த எச்சரிக்கையும் கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web