’கூலி’ டீசர் லோகேஷ் பிறந்தநாளில் வெளியீடு?!

 
கூலி

 நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படமாக கூலி  திரைப்படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வருகிறது. லியோ படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், சௌபின் ஷாகிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, நாகார்ஜுனா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். 

கூலி

இப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் நிறைவடைந்திருக்கும் நிலையில்  குத்து பாடல் ஒன்றிற்கு நடிகை பூஜா ஹெக்டே நடனம் ஆடியுள்ளார். கூலி படத்தின் டீசர் மற்றும் புதிய போஸ்டர்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேள்வி கேட்டுவருகின்றனர். 

கூலி ரஜினி

இந்நிலையில், இப்படத்தின் டீசர் அல்லது கிளிம்ஸ் வீடியோவை இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பிறந்த நாளான மார்ச் 14 ம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் - 2 படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web