சாலையோர மரத்தில் பைக் மோதி காவலர் உயிரிழப்பு!

 
திலீப்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற முதல்நிலை காவலர் சாலையோரம் உள்ள புளியமரத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் கீழாண்டைமோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார், விவசாயி. இவரது மனைவி சித்ரா. தம்பதியருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் 2வது மகன் திலீப் (27). சென்னை ஆவடி பட்டாலியனில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில் நேற்று திலீப் வீட்டில் இருந்து வாலாஜாவுக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார்.

பைக்

சோளிங்கர் அடுத்த கொடைக்கல் ஆவின் பால் நிலையம் அருகே சென்றுக் கொண்டிருந்த போது, திடீரென திலீப் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உள்ள புளியமரத்தில் அதிவேகமாக மோதியது. இதில், திலீப்புக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு அங்கேயே உயிரிழந்தார்.

இந்த விபத்துக் குறித்து தகவலறிந்த கொண்டப்பாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிரிழந்த திலீபின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?