இளம்பெண்ணுக்கு 29 ஆபாச வீடியோக்களை அனுப்பி போலீஸ்காரர் பாலியல் தொல்லை - கலெக்டரிடம் புகார்!

 
பாலியல் பலாத்காரம் சிறுமி

தென்காசி மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், புளியங்குடி காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஒருவர் மீது அடுக்குகடுக்கான பாலியல் புகார்களை ஆதாரங்களுடன் ஆட்சியர் கமல் கிஷோரிடம் சமர்ப்பித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள மனுவில், “கடந்த 2023-ஆம் ஆண்டு அந்தப் பெண்ணின் கணவர் ஒரு புகார் அளிக்கப் புளியங்குடி காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த காவலர் ஒருவர், அவரது கணவரின் செல்போனைப் பறித்து வைத்துக்கொண்டு அனுப்பியுள்ளார். அதிலிருந்து அந்தப் பெண்ணின் எண்ணைத் திருடி வைத்துள்ளார். கடந்த 2023 ஆண்டு முதல் செப்டம்பர் 2024 வரை அந்தப் பெண்ணிற்குத் தொடர்ந்து 29 ஆபாச வீடியோக்கள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி அந்தப் போலீஸ்காரர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

இது குறித்து கணவர் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாத சூழலில், கடந்த டிசம்பர் 11, 2025 அன்றும் மீண்டும் அந்தப் பெண்ணிற்கு ஆபாச வீடியோவை அனுப்பி அந்த காவலர் அத்துமீறியுள்ளார். சம்பந்தப்பட்ட காவலர் அனுப்பிய அனைத்து ஆபாச வீடியோக்கள் மற்றும் குறுஞ்செய்திகளை அந்தப் பெண் 'ஸ்கிரீன் ஷாட்' எடுத்து ஆதாரமாக வைத்துள்ளார். ஏற்கனவே பதிவுத் தபால் மூலம் அதிகாரிகளுக்கு அனுப்பியும் நடவடிக்கை இல்லாததால், தற்போது நேரடியாக ஆட்சியரைச் சந்தித்துப் புகார் அளித்துள்ளார்.

மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் கமல் கிஷோர், இந்தப் புகார் குறித்துத் துறை ரீதியான விசாரணை நடத்தி, தவறு செய்த காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!