ரயிலில் கல்லூரி மாணவியிடம் காவலர் 'சில்மிஷம்'... பதற்றமடையாமல் மாணவி கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்!

 
பாலியல்

ரயிலில் பயணம் செய்த கல்லூரி மாணவியிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட கோவை காவலர், அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சட்டக்கல்லூரி மாணவியின் துணிச்சலான நடவடிக்கையால் இந்த கிரிமினல் காவலர் கம்பி எண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

கோவை ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் சேக் முகமத். இவர் அலுவல் ரீதியான பாதுகாப்புப் பணிக்காகச் சென்னை சென்றுவிட்டு, கடந்த சனிக்கிழமை அன்று சென்னையிலிருந்து கோவை வரும் 'இன்டர்சிட்டி' ரயிலில் பயணம் செய்தார். அதே ரயிலில், சென்னையில் சட்டக் கல்லூரி பயிலும் கோவையைச் சேர்ந்த மாணவி ஒருவரும் கோவைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

பாலியல்

ரயில் காட்பாடி அருகே வந்து கொண்டிருந்த போது, சீருடையில் இருந்த காவலர் சேக் முகமத், தனது அருகில் அமர்ந்திருந்த மாணவியிடம் அநாகரீகமான முறையில் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, பதற்றப்படாமல் தனது செல்போன் மூலம் காவலரின் சில்மிஷங்களை வீடியோவாகப் பதிவு செய்தார். தப்பிக்க வழி தேடாமல், ஆதாரத்துடன் அவரைப் பிடிக்க மாணவி துணிச்சலாகச் செயல்பட்டார்.

உடனடியாக மாணவி இதுகுறித்து ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். ரயில் அரக்கோணம் நிலையத்தை அடைந்ததும், அங்கிருந்த போலீசார் சேக் முகமத்தை ரயிலிலிருந்து தரதரவென இறக்கினர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதோடு, மாணவியின் புகாரின் பேரில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

பாலியல் பலாத்காரம் சிறுமி

பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவலரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சேக் முகமத்தை பணியிடை நீக்கம் (Sustpension) செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

"காவல்துறை உங்கள் நண்பன்" என்பது இவரைப் போன்றவர்களால் "காவல்துறை உங்கள் எதிரி" என்று மாறிவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர் பொதுமக்கள். இந்த மாணவியின் துணிச்சலை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!