கொத்தமல்லி விலை கடும் வீழ்ச்சி... ஒரு கட்டு ₹3-க்கு வாங்கவும் ஆள் இல்லா கொடுமை... விவசாயிகள் கண்ணீர்!
கோவை மாவட்டத்தின் காய்கறித் தோட்டமான தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளைந்துள்ள கொத்தமல்லி தழை, கட்டுப்படியாகும் விலை கிடைக்காததால் வயல்களிலேயே காய்ந்து வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதிகளில் சுமார் 1,000 ஏக்கருக்கும் மேல் கொத்தமல்லி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் கொத்தமல்லி பயிரிட விதை, உரம், மருந்து மற்றும் கூலி எனச் சுமார் ₹7,000 வரை விவசாயிகள் செலவு செய்துள்ளனர்.

கடந்த வாரம் வரை ஒரு கட்டு கொத்தமல்லி ₹20-க்கு விற்பனையான நிலையில், தற்போது அதன் விலை வெறும் ₹3-ஆகக் குறைந்துள்ளது. இவ்வளவு குறைந்த விலைக்குக் கூட வியாபாரிகள் வாங்க முன்வராததால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
கொத்தமல்லி என்பது 50 நாட்களில் அறுவடை செய்யப்பட வேண்டிய குறுகிய காலப் பயிர். 50 நாட்களைக் கடந்தால் இலைகள் பழுத்து, வேர் அழுகி விற்பனைக்குத் தகுதியற்றதாகிவிடும். "அறுவடை செய்யும் கூலிக்குக்கூடப் பணம் கிடைக்காது என்பதால், செடிகளை வயலிலேயே விட்டுவிட்டோம்" என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
வேளாண்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, விளைபொருட்களைப் பதப்படுத்தவோ அல்லது வெளிமாநில சந்தைகளுக்கு அனுப்பவோ ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே இவர்களின் தற்போதைய கோரிக்கையாக உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
