உஷார் மக்களே... 24 மணி நேரத்தில் 752 பேருக்கு கொரோனா.. 4 பேர் உயிரிழப்பு... !

 
கொரோனா

இந்தியாவின் பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஜேஎன்என் வைரஸ் பரவலை அடுத்து  இந்திய சுகாதாரத்துறை பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் , தடுப்பு முறைகளையும் மேற்கொண்டு வருகிறது. இது குறித்து  பல மாநிலங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி பொது இடங்களில் முகக்கவசம்,  சமூக இடைவெளியை அறிவுறுத்தியுள்ளது.  

கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,50,07,964 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,33,332 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 325 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா

இதன்மூலம் இதுவரை 4,44,71,212 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 3,420 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 20,860 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 93,53,15,761 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் என ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை 220.67 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web