வேகமெடுக்கும் கொரோனா... மீண்டும் முகக்கவசம் கட்டாயம்... அதிரடி உத்தரவு!

 
கொரோனா
2019ம் ஆண்டு சீனாவின் வூகாண் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது. 2023ல் தடுப்பூசி சமூக இடைவெளி என பல தீவிரமான நடவடிக்கைகளால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.  கடந்த இரண்டு ஆண்டுகளாக அவ்வப்போது கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்தாலும், இதுவரை தீவிரமாக மாறவில்லை. 

தற்போது, ஹாங்காங், சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும்  நிலையில், இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்தியா முழுவதும் கொரோனாவால்  257 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கொரோனா
அதிகபட்சமாக கேரளாவில் 95 பேர்; தமிழகத்தில் 66 பேர்; மஹாராஷ்டிராவில் 56 பேர்; கர்நாடகாவில் 13 பேர்; புதுச்சேரியில் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு பரவலாக இருப்பதால், மக்கள் கவலை அடைந்துள்ளனர். கேரளாவில் கொரோனா பாதித்த நபர் உயிரிழந்துள்ளார். இது குறித்து, தமிழக பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா  தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இல்லை. தற்போது, வீரியம் குறைந்த கொரோனா தொற்று பாதிப்பு தான் உள்ளது. 'ஒமைக்ரான்' வகை வைரஸ் உட்பிரிவுகளான,ஜெ.என்., 1 மற்றும் எக்.இ.சி., ஆகிய தொற்றுகளே காணப்படுகின்றன. இந்நோயின் தாக்கம் மற்றும் இறப்பின் விகிதம் குறைவே.  
ஆனாலும், பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது  அவசியம். காய்ச்சல், நுரையீரல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், அருகில் உள்ள மருத்துவரின் ஆலோசனையின் பேரில்  சிகிச்சை பெறுவது அவசியம். 


குறிப்பாக சென்னையில்  தி.நகர், சின்மயா நகர், நடேசன் நகர் பகுதிகளில் கொரோனாவால் சிலர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும். வெளியே எங்கேயும் செல்ல வேண்டாம் என   மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது