1000 ஐ கடந்த கொரோனா பரவல் ... பீதியில் மக்கள்..!!

 
கொரோனா

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.  இதனையடுத்து கொரோனா தடுப்பு முறைகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அம்மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கொரோனாவால்பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கொரோனா
கேரளாவில் கடந்த சில நாட்களாக  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  ஒரே நாளில் 346 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 1,324 பேர்  பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மாநிலம் முழுவதும்   காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருப்பதால் பரிசோதனைகளும்   அதிக அளவில் நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா

அதனால் பாதிப்பு எண்ணிக்கை கண்டறியப்படுவது அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   கொரோனாவால் பாதிக்கப்பட்ட கோழிக்கோட்டில் வசித்து வரும்  குமரன்,  கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல்லா  சிகிச்சை பலனின்றி இறந்தனர். அவர்கள் இறப்புக்கு வயது முதிர்வு மற்றும் இணைநோய்கள் தான்  காரணம்.  வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும்   மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!