விஜய்க்கு கிரேனில் ஏறி மாலை அணிவித்த கவுன்சிலர் கைது!

 
விஜய்

Vellore மாவட்டம் பள்ளிகொண்டா அருகே நடந்த த.வெ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க கட்சி தலைவர்  விஜய் சென்னையிலிருந்து காரில் வந்தார். வழியெங்கும் அவரைக் காண பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டனர். வெட்டுவானம் அருகே பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் பெரும் திரளான மக்கள் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அப்போது அனுமதி இல்லாமல் கிரேனில் அலகு குத்திக்கொண்டு ஒருவர் அந்தரத்தில் இருந்து மாலை அணிவிக்க முயன்றார். உடனே போலீசார் அவரை கீழே இறக்கி பள்ளி கொண்டா காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் குடியாத்தம் ஒன்றியத்துக்குட்பட்ட தாட்டிமான்பள்ளி ஊராட்சி கவுன்சிலர் ஏழுமலை என்பது தெரியவந்தது.

பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாலும், அனுமதி பெறாமல் மாலை அணிவிக்க முயன்றதாலும் அவர்மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கிரேன் வாகனத்தையும் பறிமுதல் செய்து அதன் உரிமையாளர் முனிரத்தினத்தையும் கைது செய்தனர். பின்னர் இருவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!