ஜூலை 7ம் தேதி பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் தொடக்கம்!

பொறியியல் படிப்புகளுக்கு தரவரிசை பட்டியலை, அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டார். ஜூலை 7 முதல் கவுன்சிலிங் தொடங்குகிறது.
சென்னை அண்ணா பல்கலையின் கீழ், 463 பொறியியல் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. 2025- 26ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு நடந்தது. இதில், 3 லட்சத்து 2,374 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில், 2 லட்சத்து 49,883 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர்; 2 லட்சத்து 26,359 மாணவர்கள் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்து உள்ளனர்.
இந்நிலையில் இன்று (ஜூன் 27) பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கவுன்சிலிங் ஜூலை 14ம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 17ம் தேதி முடிவடைகிறது. சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 7ம் தேதி முதல் ஜூலை 11ம் தேதி வரை நடைபெறுகிறது. துணைப் பிரிவு கவுன்சிலிங் ஆகஸ்ட் 21ம் தேதி முதல் ஆகஸ்ட் 23ம் தேதி வரை நடக்கிறது.
தரவரிசை பட்டியலை வெளியிட்ட பின் உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியதாவது: 200க்கு 200 என்ற கட் ஆப் எடுத்த மாணவர்கள் 145 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாணவர்கள் https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் தரவரிசை எண்ணை தெரிந்து கொள்ளலாம். கடந்த ஆண்டை விட நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கு 40,645 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்” என்று கூறினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!