இன்று முதல் 50 எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வு!
தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 20 ஆயிரம் இதய இடையீட்டு சிகிச்சைகள் மற்றும் 500 ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான பாராட்டு விழா ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.

விழாவுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 50 காலியிடங்களை நிரப்ப ஒன்றிய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியதாக தெரிவித்தார். அதனை ஏற்று ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் இன்று முதல் 23-ம் தேதி வரை 23 எம்பிபிஎஸ் இடங்களும், 27 பிடிஎஸ் இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளதாக கூறினார்.

மேலும், ரூ.7.70 கோடி மதிப்பீட்டில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பிரிவு விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். ஒப்பந்த செவிலியர்கள் யாரையும் அரசு புறக்கணிக்காது என்றும், கடந்த நான்கு ஆண்டுகளில் 3,783 ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மீதமுள்ளவர்களும் காலியிடங்கள் ஏற்படும் போது படிப்படியாக நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
