இன்று மீண்டும் வாக்கு எண்ணிக்கை!! பரபரக்கும் அரசியல் வட்டாரம்!!

 
வாக்கு எண்ணிக்கை

தமிழகத்தில் கடந்த 2021ல் நடைபெற்ற  சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி சார்பில் எஸ்.பழனி நாடாரும், அதிமுக சார்பில் வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியனும் போட்டியிட்டனர். இதில்  பழனி நாடார் செல்வமோகன்தாஸை விட 370 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 
பழனி நாடாரின் இந்த வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில்  பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் வித்தியாசம் இருப்பதை தெரிவித்தார். அதன்படி  தபால் வாக்குகளையும், மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளில் 28 முதல் 30 சுற்று வரையிலான வாக்குகளை மறு எண்ணிக்கை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.  

9 மாவட்டங்களில் இன்று ஓட்டு எண்ணிக்கை! எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!


நீதிபதி ஜி.ஜெயசந்திரன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வந்த இந்த தேர்தல் வழக்கில்  அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இந்நிலையில் இந்த வழக்கில் இம்மாத தொடக்கத்தில்  தபால் வாக்குகள்  எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்துள்ளதாக  ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, தபால் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிட்டு இருந்தார்.அதன்படி தபால் வாக்குகளை 10 நாட்களில் மீண்டும் எண்ணி முடிவை அறிவிக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வழக்கிற்கான செலவாக ரூ10000ஐ   வழக்கு தொடர்ந்த அதிமுக வேட்பாளர் செல்வமோகன் தாஸ் பாண்டியனுக்கு வழங்க வேண்டும் எனவும் தேர்தல் அதிகாரிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தமிழகத்தில் மே 2ம் தேதி திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை!சத்ய பிரதா சாகு உறுதி!

இந்த உத்தரவின் படி  இன்று தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சட்டமன்றத் தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் மறு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தொடங்கி உள்ளது. இன்று காலை 10 மணியளவில் தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கைக்கான தேர்தல் அதிகாரியாக உதவி ஆட்சியர் லாவண்யா நியமிக்கப்பட்டுள்ளார்.  
வாக்கு எண்ணிக்கை நடக்கும்போது அந்த இடத்தில்  வேட்பாளர், அவரது பிரதிநிதிக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இவர்களைத்  தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை.   அந்த வகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பழனி நாடாரும், அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் தரப்பில் மேலகரம் அதிமுக செயலாளர் வழக்கறிஞர் கார்த்திக் குமாரும் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ளனர்.வாக்கு எண்ணும் மையத்தில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும் நிலையில்  மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி  ஆய்வு மேற்கொண்டார்.  இன்று மறுவாக்கு எண்ணிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தொடங்கிநடைபெற்று வருகிறது.  இதனால் அப்பகுதி மக்களிடையே உச்சகட்ட பரபரப்பும், எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web