காதல் தம்பதியர் கிணற்றில் குதித்து தற்கொலை!

 
கிணறு
 


ஈரோடு மாவட்டம் கோபி அருகே காதல் திருமணம் செய்த இளம் தம்பதியர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே அரசூர் இண்டியம்பாளையம் சின்னகரட்டைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி (19). இவர் புதுக்கொத்துகாட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சக்திவேல் (23) என்பவரைக் காதலித்து வந்த நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் இருவரும் புதுக்கொத்துகாட்டில் வசித்து வந்தனர்.

சொந்த சகோதரனை அடித்தே கொலை செய்த கொடூர அக்கா!! பிணம்

இந்நிலையில் நேற்றிரவு அரசூர் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள இருவரும் சின்னகரட்டில் உள்ள பிரியதர்ஷினியின் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.  அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் மனமுடைந்த பிரியதர்ஷினி சின்னகரட்டில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். மனைவி தற்கொலை செய்துக் கொள்வதைப் பார்த்த சக்திவேலுவும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?