ஐஸ்க்ரீம் கடையில் மின்சார வாகன பேட்டரி வெடித்து தம்பதி உடல் கருகி பலி... பெரும் சோகம்!

 
ஐஸ்க்ரீம் ஐஸ்க்ரீம்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள தேவி நகர் பகுதியில் குல்பி ஐஸ் தயாரிக்கும் கூடம் ஒன்றில் இன்று அதிகாலை எதிர்பாராத விதமாக நேரிட்ட தீ விபத்து அப்பகுதியையே அதிர வைத்துள்ளது. அந்த கூடத்தின் உரிமையாளரான பவன்லால் மற்றும் அவரது மனைவி சுந்தரி ஆகியோர், இன்று காலை வழக்கம் போல விற்பனைக்காகப் பால் காய்ச்சும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அவர்கள் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார வாகனத்தின் பேட்டரி, வெப்பம் தாங்காமல் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் ஏற்பட்ட தீ மளமளவென அந்த அறை முழுவதும் பரவி பெரும் தீப்பிழம்பாக மாறியது.

ஐஸ்க்ரீம்

கண் இமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில், தப்பித்து ஓடக் கூட முடியாமல் பவன்லால் மற்றும் சுந்தரி ஆகிய இருவரும் தீயில் சிக்கிக் கொண்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர், ஆனால் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்களால் உள்ளே நுழைய முடியவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆற்காடு தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக அந்தத் தம்பதியினர் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர்.

ஆம்புலன்ஸ்

தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளுக்குள் இருந்து இருவரது உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்து நடந்த இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சார வாகனத்தை மின்னூட்டம் செய்தபோது விபத்து ஏற்பட்டதா அல்லது பால் காய்ச்சிய வெப்பத்தால் பேட்டரி வெடித்ததா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. உழைப்பாளி தம்பதியினர் இதுபோன்று கோர விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!