களைகட்டிய குற்றால சீசன்... அருவிகளில் உற்சாக குளியல் போடும் சுற்றுலா பயணிகள்!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களும் குற்றால சீசன் காலமாகும்.இங்கு நிலவும் மிதமான சாரல் மழையும், லேசான வெயிலும், குளிர்ந்த காற்றையும் அனுபவித்து மகிழ தமிழகம், இந்தியாவின் பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர். நடப்பாண்டை பொறுத்தவரை இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதால் மே மாதம் 3 வது வாரத்திலேயே அருவிகளில் தண்ணீர் விழ துவங்கியது.
ஆனால் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து குற்றாலம் பகுதியில் கனமழை பெய்ததால் அருவிகள் அனைத்திலும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க ஒரு வாரத்திற்கு மேலாக தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது படிப்படியாக நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மழையும், வெயிலும் மாறி, மாறி இருப்பதால் அவ்வபோது பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
இந்நிலையில் தற்போது குற்றாலத்தில் சீசன் களை கட்ட தொடங்கி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை மிக அதிகமாக காணப்பட்டது. பகலில் லேசான வெயிலும், மேக கூட்டமும், மெல்லிய சாரலும் மாறி, மாறி காணப்பட்டது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!