குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு... குளிக்கத் தடை!
தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் பிரதான அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பல பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வருகிறது.

தென்காசி, செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்த கனமழை காரணமாக பிரதான குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு உருவாகியுள்ளது. இன்று பிற்பகல் 1 மணி நிலவரப்படி, அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
