குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை... சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தற்போது தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதிகாப்பு கருதி, மெயின் அருவி, பழைய குற்றால அருவி மற்றும் ஐந்தருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பாக இன்றும் 10-வது நாளாக தடை தொடர்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் கொட்டும் தண்ணீரை கம்பி வேலிக்குள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். அதே நேரத்தில் தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!