மூக்கை பொத்திட்டு குளிங்க... பம்பையில் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை!

 
சபரிமலை

 

கார்த்திகை ஒன்றை முன்னிட்டு சபரிமலையில் நடை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அனுஸ்டானம் தொடங்கி பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கி வசதி செய்துள்ளது. கேரள அரசும் சீசன் காரணமாக அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.

மேல்சாந்தி பொறுப்புகள் மாற்றப்பட்ட நிலையில், நடை திறப்பு விழாவில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கூட்டம் அதிகரித்துள்ளது. மண்டல பூஜை டிசம்பர் 27 வரை நடைபெற உள்ள நிலையில், இதுவரை 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். நாள் ஒன்றுக்கு 90 ஆயிரம் பேர் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு பணியில் 18,741 போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிர்ச்சி தரும் அமீபா தொற்று பரவல் அச்சம் காரணமாக, பம்பை நதியில் குளிக்கும் போது மூக்கை விரலால் அடைத்து குளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மொபைல், கேமரா பயன்படுத்துவதற்கு 18ம் படி மேல் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனவரி 16 வரை தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை தொடர்ந்து இயக்க உள்ளது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!