2 வருடங்களாக டிமிக்கி கொடுத்த மாடு மற்றும் எருமை திருடன் சாக்கடைக்குள் குதித்த சம்பவம்... தட்டித் தூக்கிய காவல்துறை!

 
 2 வருடங்களாக டிமிக்கி கொடுத்த மாடு மற்றும் எருமை திருடன்  சாக்கடைக்குள் குதித்த  சம்பவம்... தட்டித் தூக்கிய காவல்துறை!
மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் மாவட்டத்தில்  தொடர்ந்து மாடுகள் மற்றும் எருமைகள் திருட்டு போய் கொண்டே இருந்தன. அதே ஊரை சேர்ந்த நபர் ஒருவர்  திருடி அதனை சந்தைகளில் விற்று சம்பாதித்து வந்துள்ளார். அவர் சமீபத்தில்  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இது குறித்த முதல் கட்ட தகவலில் அவரது பெயர் அசோக்.இவர்  மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா பகுதிகளில் மாடு மற்றும் எருமைகளை திருடி அதனை விற்று சம்பாதித்து வந்துள்ளார்.  அதாவது அவர் லாத்தூர் பகுதிக்கு வந்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 


இதன் பேரில் போலீசார் அங்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது போலீசாரை கண்ட அவர் தப்பிப்பதற்காக சுண்ணாம்பு கழிவகத்தில் உள்ள சாக்கடையில் சென்று மறைந்து கொண்டார். அவரது முகம் மட்டும் வெளியே தெரிந்த படி வெளியில் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தார்.  அதனை கவனித்த காவல்துறையினர் அவரை வெளியே கொண்டு வந்தனர்.
அசோக் மீது கழிவும் மண்ணும் இருந்ததால் அதனை காவல்துறையினர் மீது வீசிவிட்டு தப்பிக்க முயற்சி செய்தார். ஆனால் அவரை காவல்துறையினர் வசமாக பிடித்து கைது செய்தனர்.  அவரை சுத்தம் செய்த பிறகு கைது செய்த காவல்துறையினர் எந்தெந்த பகுதியில் மாடுகளை திருடினார்? எங்கு விற்றார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web