கொடூரம்!! டேங்கர் லாரிக்குள் அடைத்து மாடுகள் கடத்தல்!! 11 மாடுகள் துடிதுடித்து பலி!!

 
மாடு

அசாமின் கவுகாத்தியில் சோனாபூர் அருகே டேங்கர் லாரியில் 40  மாடுகள் கடத்தப்பட்டன. கடத்தப்பட்ட 40 கால்நடைகளை போலீஸார் மீட்டுள்ளனர். மாடுகளை புதிய வழியில், டேங்கர் லாரியில் கடத்தியிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.   மேகாலயாவுக்கு மாடுகள் கடத்தப்பட்ட நிலையில், அதனை மீட்ட போது, கால்நடைகள் ஆபத்தான நிலையில் இருந்தன. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதில் 11 மாடுகள் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாடு


மாடுகள் மனிதாபிமானமற்ற முறையில் கடத்தப்பட்டதால் லாரியின் டேங்கருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மாடுகள்   உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தன. "எங்களுக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது மற்றும் போலீஸ் அதிகாரி குழு விரைந்து வந்து அந்த இடத்திற்கு வந்து கால்நடைகளை கைப்பற்றி 2 நபர்களை கைது செய்தது," என  காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மாடு

இது குறித்து   ''முதல்முறையாக, மாடு கடத்தல்காரர்கள், கடத்தல் மாடுகளை ஏற்றிச் செல்ல இதுபோன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர். மாடுகளை கடத்துபவர்கள் தற்போது பல்வேறு உத்திகளை பயன்படுத்தி கால்நடைகளை தங்கள் இடங்களுக்கு கொண்டு செல்கின்றனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web