பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபடுவோம் – துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்!

 
சி.பி.ராதாகிருஷ்ணன்

1998ம் ஆண்டு இதே நாளில் கோயம்புத்தூரில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளை நினைவுகூர்ந்து குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆழ்ந்த அஞ்சலி தெரிவித்துள்ளார். பிப்ரவரி 14, 1998 அன்று நடைபெற்ற அந்த கொடூர தாக்குதல் நாட்டின் வரலாற்றில் மறக்க முடியாத இருண்ட பக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்த அப்பாவி மக்களை கனத்த மனதுடன் நினைவுகூருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அன்று எல். கே. அத்வானி கோவைக்கு வந்திருந்த வேளையில் இந்த வெடிப்புகள் நிகழ்ந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பல குடும்பங்களின் வாழ்வில் ஆறாத காயங்களை ஏற்படுத்திய அந்த சம்பவம் நாட்டின் மனச்சாட்சியையே உலுக்கியது எனவும் தெரிவித்துள்ளார். அந்த தாக்குதல்களில் ஒன்றில் தானும் மயிரிழையில் உயிர்தப்பியதாக அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போராடிய தருணங்கள் இன்னும் மனதில் பதிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். உயிரிழந்த ஒவ்வொரு ஆன்மாவையும் பணிவுடன் நினைவுகூர்ந்து, துயரத்தில் இருக்கும் குடும்பங்களுடன் ஒன்றுபட்டு நிற்கிறேன் என தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அனைவரும் ஒன்றிணைந்து அமைதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை காக்க உறுதியேற்போம் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!