சிஆர்பிஎஃப் வாகனம் ஆற்றில் கவிழ்ந்து 9 பேர் காயம்!

 
cprf

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் புறநகர் அகமதுநகரில் டேக்போரா–உமர்ஹைர் சாலையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் வாகனம் அருகிலிருந்த ஆற்றில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 9 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் நடந்தவுடன் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

காயமடைந்த வீரர்கள் கௌராவில் உள்ள SKIMS Medical College Hospital மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!