கூட்டணிக்குள் விரிசலா? அமித்ஷாவை வரவேற்கச் செல்லாத எடப்பாடி பழனிசாமி!

 
அமித்ஷா விமான நயினார்

இன்று இரண்டு நாள் சுற்றுப்பயணமாகத் தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்க, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வராதது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அந்தமானிலிருந்து தனி விமானம் மூலம் இன்று மதியம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார் அமித்ஷா. அவரை வரவேற்கத் தமிழக பாஜக தலைவர்கள் மற்றும் அதிமுகவின் முக்கிய முன்னாள் அமைச்சர்களான தங்கமணி, சி.விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோர் வந்திருந்தனர். ஆனால், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) முக்கியத் தூணாகவும் பார்க்கப்படும் எடப்பாடி பழனிசாமி நேரில் வராதது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அமித்ஷா

எடப்பாடி பழனிசாமி தற்போது தனது கட்சி சார்ந்த முக்கியச் சுற்றுப்பயணத்தில் இருப்பதால் அவரால் வர இயலவில்லை என அதிமுக தரப்பில் கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி திருச்சி வந்தபோது, தனது பிரச்சாரக் கூட்டத்தையே ரத்து செய்துவிட்டு எடப்பாடி பழனிசாமி அவரைச் சந்திக்கச் சென்றார். ஆனால் இப்போது அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு அவர் வராதது, பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே நிலவும் 'சீட் பங்கீடு' அல்லது 'தலைமை' தொடர்பான இழுபறியின் வெளிப்பாடோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருச்சியில் தங்கியுள்ள அமித்ஷா, இன்று மாலை 5 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை செல்கிறார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' நிறைவு விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறார். நாளை காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். அதன் பிறகு மன்னார்புரம் பகுதியில் நடைபெறும் 'மோடி பொங்கல்' விழாவில் கலந்து கொண்டுவிட்டு டெல்லி திரும்புகிறார்.

அமித்ஷா வருகையை ஒட்டித் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், இன்றும் நாளையும் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமித்ஷாவை நேரில் சந்திக்காத எடப்பாடி பழனிசாமியின் இந்த முடிவு, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி உறவில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!