தமிழக விஞ்ஞானிக்கு கிராஃபூர்ட் பரிசு... அமெரிக்காவில் மரியாதை!
அமெரிக்காவில் வசித்து வரும் தமிழக காலநிலை விஞ்ஞானி வீரபத்ரன் ராமநாதனுக்கு புவி அறிவியல் ஆய்வுக்கான உயரிய ‘கிராஃபோர்ட்’ பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசளிக்கும் ஸ்வீடனின் ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாதெமி இந்த பரிசை அறிவித்துள்ளது. புவி அறிவியலுக்கான நோபல் பரிசு என கருதப்படும் இந்த விருது, அவரது நீண்டகால ஆய்வுகளுக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
கரியமில வாயுவைவிட பல மடங்கு அதிகமாக பூமியை வெப்பமயமாக்கும் சிஎஃப்சி வாயுக்கள் குறித்து 1975-ஆம் ஆண்டு நாசாவில் பணியாற்றியபோது ராமநாதன் கண்டுபிடித்தார். இதன் மூலம் புவி வெப்பமயமாதல் குறித்த உலகின் புரிதல் மாறியது. மேலும், வளிமண்டல பழுப்பு நிற மேகங்கள் குறித்த அவரது ஆய்வு, தெற்காசிய பருவமழை மாற்றம், இமய பனிப்பாறைகள் உருகுதல் மற்றும் காற்று மாசு ஆகியவற்றுடன் நேரடி தொடர்பு கொண்டது.

மதுரையில் பிறந்து சென்னையில் வளர்ந்த வீரபத்ரன் ராமநாதன், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் கல்வி பயின்றவர். நாசாவில் பணியாற்றிய பின்னர், கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் சான் டியேகோவில் கௌரவ பேராசிரியராக உள்ளார். கிராஃபோர்ட் பரிசுடன் அவருக்கு 8 மில்லியன் ஸ்வீடிஷ் க்ரோனர், இந்திய மதிப்பில் சுமார் ரூ.8.25 கோடி ரொக்கமாக வழங்கப்பட உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
